உலகம்

ரஷியாவில் ஒருநாளில் 790 பேர் கரோனாவுக்குப் பலி

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 790 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,856 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 70,30,455 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் மேலும் 790 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1,87,990 ஆக உயர்ந்துள்ளது. 

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 1,463 பேர் உள்பட இதுவரை 15,76,818 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி 5,57,458 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 14,276 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 62,85,007 ஆக உயர்ந்துள்ளது. 

ரஷியாவில் இதுவரை 3.8 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT