முகப்பு
உலகம்

ஜெர்மனியில் கரோனாவால் 40 லட்சம் பேர் பாதிப்பு

ஜெர்மனியில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
ஜெர்மனியில் கரோனாவால் 40 லட்சம் பேர் பாதிப்பு
பகிர்:

ஜெர்மனியில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஜெர்மனியில்  இதுவரை 40.20 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

நேற்று (செப்-6) நிலவரப்படி புதிதாக 6,977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 40.20 லட்சமாக உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 92,419 ஆகவும் பதிவாகியிருக்கிறது.

மேலும்  இதுவரை ஜெர்மனியில் 5.78 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும்  அதில் 5.14 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டார்கள்  எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 66 சதவீதம் ஆகும்.

முழு கட்டுரையைப் படிக்க →