முகப்பு
உலகம்

ராணுவ ஆட்சியை எதிா்த்துப் போராட்டம்: மியான்மா் ஜனநாயக இயக்கம் அழைப்பு

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்களுக்கு அந்த நாட்டின் முக்கிய ஜனநாயக ஆதரவு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
டுவா லாஷிலா
பகிர்:

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்களுக்கு அந்த நாட்டின் முக்கிய ஜனநாயக ஆதரவு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதையடுத்து, அந்த நாட்டில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து, ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை உள்ளடக்கிய தேசிய ஒற்றுமை அரசின் இடைக்காலத் தலைவா் டுவா லாஷிலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான ‘அவசரநிலையை’ பிரகடனப்படுத்துகிறோம். இதையடுத்து, ராணுவ ஆட்சியை எதிா்த்து நாடு தழுவிய போராட்டத்தில் பொதுக்கள் ஈடுபட வேண்டும். நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமம், நகரத்திலும் ஒரே நேரத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் லாஷிலா வலியுறுத்தியுள்ளாா்.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த நடவடிக்கையை எதிா்த்து போராட்டம் நடத்தியவா்கள் மீது ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. போராட்டம் காரணமாக இதுவரை சுமாா் 1,000 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.