உலகம்

நியூயார்க் : 'இடா' புயலால் 60 பேர் பலி

DIN

நியூயார்க் நகரில் 'இடா' புயல் காரணமாக பெய்த கனமழையில் சிக்கி 60 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.

அமெரிக்கா வட கிழக்கு மாகாணங்களில் 'இடா' புயல் காரணமாக கனமழை பெய்துவருகிறது. இதையடுத்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 6,00,000 வீடுகளுக்கு மேல் மின்சாரம் தடை செய்யபட்டிருக்கும் நிலையில் புயலால் கடுமையான சேதங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இதுவரை புயலில்  சிக்கி 60 பேர் உயிரிழந்ததாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்டு நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

தெற்கு மாகாணமான லூசியானாவில் 'இடா' புயல் மற்றும் சூறாவளி காரணமாக தீவிரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாகாணத்தின் வடக்கு பகுதிகள் பெரும் பாதிப்படைந்தன.

முக்கியமாக புரூக்ளின் மற்றும் குயின்ஸ் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தால் முழ்கடிக்கப்பட்டு பலத்த சேதம் அடைந்திருப்பதாக  அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நெவார்க், லாகார்டியா மற்றும் ஜேஎஃப்கே  ஆகிய பகுதிகள் அருகே அமைந்துள்ள விமான நிலையங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மன்ஹாட்டன், தி பிராங்க்ஸ் மற்றும் குயின்ஸ் ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது. 
  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT