உலகம்

’இடா’ புயலால் உயரும் பலி எண்ணிக்கை

DIN

நியூயார்க் நகரில் 'இடா' புயல் காரணமாக பெய்த கனமழையில் சிக்கி 82 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களில் 'இடா' புயல் காரணமாக கனமழை பெய்துவருகிறது. இதையடுத்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 6,00,000 வீடுகளுக்கு மேல் மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் புயலால் கடுமையான சேதங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இதுவரை புயலில்  சிக்கி 82 பேர் உயிரிழந்ததாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் இறப்புகளால் மாகண அரசுகள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தெற்கு மாகாணமான லூசியானாவில் 'இடா' புயல் மற்றும் சூறாவளி காரணமாக தீவிரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாகாணத்தின் வடக்கு பகுதிகள் பெரும் பாதிப்படைந்தன . இதனால் அப்பகுதியில் மட்டும் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

முக்கியமாக புரூக்ளின் மற்றும் குயின்ஸ் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தால் முழ்கடிக்கப்பட்டு பலத்த சேதம் அடைந்திருப்பதாக  அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நெவார்க், லாகார்டியா மற்றும் ஜேஎஃப்கே  ஆகிய பகுதிகள் அருகே அமைந்துள்ள விமான நிலையங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மன்ஹாட்டன், தி பிராங்க்ஸ் மற்றும் குயின்ஸ் ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது. 
  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT