முகப்பு
உலகம்

சிறையில் தீ விபத்து - பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

இந்தோனேசிய சிறைச்சாலையொன்றில் கடந்த செப்-8 (புதன்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 44 கைதிகள் பலியாகியிருக்கிறார்கள். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
சிறையில் தீ விபத்து - பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு
பகிர்:

இந்தோனேசிய சிறைச்சாலையொன்றில் கடந்த செப்-8 (புதன்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 44 கைதிகள் பலியாகியிருக்கிறார்கள். 

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியான டாங்கெராங் பகுதிச் சிறைச்சாலையில் புதன்கிழமை அதிகாலை தீப்பிடித்தது. 
19 செல்களைக் கொண்ட அந்தச் சிறைச்சாலையின் சி2  பகுதியில் மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சி2 பகுதியில் மட்டும் 122 குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த விபத்தில் 44 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்கள்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததும், சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.