உலகம்

எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் ஆப்கன் ஆசிரியைகள்

DIN


காபூல்: ஆப்கானிஸ்தானில் 7 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்குத் திரும்ப கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பால், ஆசிரியைகள் தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சனிக்கிழமை வெளியிடப்பட்ட கல்வித்துறையின் இந்த அறிவிப்பால், ஆயிரக்கணக்கான மாணவிகளும், ஆசிரியைகளும், தங்களது எதிர்காலம் என்னவாகுமோ என்ற கலக்கத்தில் இருக்கின்றனர்.

தங்களது குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபராக தாங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதே என்று கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆப்கன் தலைநகா் காபூலில், மாநகராட்சிப் பெண் ஊழியா்கள் பணிக்கு வருவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனா். இதுகுறித்து அந்த நகரின் இடைக்கால மேயா் ஹம்துல்லா நமோனி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மாநகராட்சியில் இதுவரைப் பணியாற்றி வந்த பெண்கள், இனி வேலைக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா். பெண்களால் மட்டுமே செய்ய முடியும் பணிகளை மேற்கொள்வோா் மட்டும் வேலைக்கு வரலாம் என்றாா் அவா்.

ஏற்கெனவே, பள்ளிகளுக்கு ஆண்கள் மட்டும் வந்தால் போதும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனா். தற்போது மாநகராட்சிப் பணிகளிலும் பெரும்பாலான பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது தலிபான்கள் பழைய ஆட்சி முறையைப் பின்பற்றுவாா்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT