உலகம்

பயண வழிகாட்டுதலில் இடம்பெறாத கோவிஷீல்டு: இந்தியர்கள் பிரிட்டன் செல்ல தடையா?

DIN

புதுப்பிக்கப்பட்ட சர்வதேச பயண வழிகாட்டுதல் பட்டியலில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி இடம்பெற்றுள்ள நிலையிலும், பிரி்ட்டனுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இதன் காரணமாக, இந்திய பயணிகளிடையே குழப்பம் நிலவிவருகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரிட்டன் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை, "இந்த பிரச்னையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்து மேலும் தெளிவுப்படுத்த வேண்டும். ஆஸ்ட்ரஜெனகா கோவிஷீல்டு, ஆஸ்ட்ரஜெனகா வேக்ஸேவ்ரியா, மாடர்னா டகேடா ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டன் சர்வதேச பயண விதிகள் பட்டியலில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த தடுப்பூசி இடம்பெறாததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திருத்தப்பட்ட பயண வழிகாட்டுதல் அக்டோபர் 4ஆம் தேதி முதல் அமலுக்குவரவுள்ளன.

கரோனா தீவிரத்தின் அடிப்படையில் நாடுகள் பட்டியலிப்பட்டு பிரிட்டனுக்கு பிற நாட்டு மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது அமலில் உள்ள சிவப்பு, அம்பர், பச்சை நிறம் பட்டியல் முறை திரும்பபெறப்படவுள்ளது. இதற்கு பதில் சிவப்பு நிற பட்டியல் முறை மட்டும் அமல்படுத்தப்படவுள்ளது.

இருப்பினும், இந்தியாவில் தடுப்பூசி செலுத்துக் கொண்டவர்கள், பிரிட்டனுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்களா என்பதில் குழப்பம் நீடித்துவருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT