கோப்புப்படம் 
உலகம்

தலிபான்கள் ஆதரவு போக்கு: தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான்

சார்க் மாநாட்டில் ஆப்கானிஸ்தான் சார்பாக தலிபான்கள் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த விவகாரத்தில் உறுப்பு நாடுகள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

DIN

கடந்த மாதம், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சி அமைத்தனர். இதையடுத்து, சனிக்கிழமை நடைபெறும் சார்க் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ஆப்கானிஸ்தான் சார்பாக தலிபான் குழுவை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. ஆனால், சார்க் உறுப்பு அந்த கோரிக்கையை நிராகரித்தது. 

இந்நிலையில், தலிபான்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் முயற்சி மேற்கொண்ட பாகிஸ்தான் உலக நாடுகளிடையே தனிமைப்பட்டு நிற்கிறது. முந்தைய அரசின் பிரதிநிதியான குலாம் இசச்சாயை ஆப்கானிஸ்தான் சார்பாக மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதி வழங்கக் கூடாது என சார்க் அமைப்பின் தலைவர் பதவி வகிக்கும் நேபாளத்திடம் எழுத்துப்பூர்வமாக பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்தது. 

ஐநா பாதுகாப்பு கவுன்சில் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ள தலிபான்களுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் உறுப்பு நாடுகள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் சார்க் மாநாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள மூத்த அமைச்சர்கள் ஐக்கிய நாடுகளாலும் அமெரிக்காவாலும் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் ஆவர். இதன் காரணமாக, பெரும்பாலான நாடுகள் தலிபான்கள் இன்னும் ஆதரிக்கவில்லை. பெரும்பாலான விவகாரத்தில் தலிபான்கள் ஆதரவு போக்கு எடுத்த ரஷ்யா, சீனா கூட அந்த அமைப்பை இன்னும் ஆதரிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.யில்: சிறுத்தை தாக்கி நான்கு வயது சிறுமி பலி

”கால தாமதம் உங்களுக்குத்தான்!” பத்திரிகையாளர்களைக் கடிந்துகொண்ட பிரேமலதா! | DMDK

சூடான், லெபனான் வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

பெங்களூருவில் தொழிலதிபர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வேதாரண்யம் : தந்தை அடித்துக் கொலை; மகன் கைது

SCROLL FOR NEXT