கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இத்தாலியில் ஒப்புதல் 
உலகம்

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இத்தாலி ஒப்புதல்

இத்தாலியில் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

DIN

இத்தாலியில் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை செலுத்துக் கொண்ட நாடுகளின் பயணிகளுக்கு கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் இத்தாலி உள்ளிட்ட 19 ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

இதற்கான அறிவிப்பை ரோம் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

இத்தாலியில் முன்னதாக ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனகா, ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லாட்வியா, நெதர்லாந்து, ருமேனியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலைகளிலே அவள் ஓவியம்... சஞ்சனா திவாரி!

ஹேப்பி பர்த் டே... குஷி கபூர்!

15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 285 ஆக அதிகரிப்பு!

அரசன் தரமாக இருக்கும்: கவின்

என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!

SCROLL FOR NEXT