ஈக்வடார்: சிறைச்சாலை மோதலில் 24 பேர் பலி 
உலகம்

ஈக்வடார்: சிறைச்சாலை மோதலில் 24 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் குயாக்வாலி நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் நேற்று(செப்-28)இரவு கைதிகளுக்குள் நடந்த மோதலில் 24 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

DIN

மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் குயாக்வாலி நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் நேற்று(செப்-28)இரவு கைதிகளுக்குள் நடந்த மோதலில் 24 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

பல்வேறு கொடுமையான குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்குள் மோதல் வெடிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஈக்வடார் நாட்டின் முக்கிய சிறைகளில் ஒன்றான குயாக்வாலி சிறைச்சாலையில் ’லாஸ் வெகோஸ்’ மற்றும் ‘லாஸ் கேனரஸ்’ என்கிற இருதரப்பினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் சம்பவ இடத்திலேயே 24 பேர் பலியானதோடு 48 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

இத்தாக்குதலில் கத்திகள் , துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் அம்மாகாண காவல்துறை அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கிட்டதட்ட 5 மணி நேர போராட்டதிற்குப் பின்பே கலவரத்தை அடக்கியிருக்கிறார்கள்.

மோதல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமண பந்தத்தில் இணைந்த பிரபல தொடர் நடிகர்!

2025-ன் ஹாரர் திரைப்படங்கள் ஓர் பார்வை!

பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ. 5,000 வழங்க வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி

2025-ல் அறிமுகமான சின்ன திரை தொடர்கள்!

காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 638 புள்ளிகளுடனும், நிஃப்டி 206 புள்ளிகளுடனும் நிறைவு!

SCROLL FOR NEXT