உலகம்

தாய்லாந்து: கனமழையால் 70,000 வீடுகள் பாதிப்பு

DIN

தாய்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் புயலால் உருவான கனமழையால் இதுவரை 70,000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

தாய்லாந்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அந்நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள 70 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன. 

மேலும் அடுத்த சிலதினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாகவும் இருவரைக் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT