முகப்பு
(கோப்புப்படம்)
உலகம்

அட்லாண்டிக் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 52 பேர் நிலை என்ன?

ஸ்பெயின் நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணம் செய்தவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
(கோப்புப்படம்)
பகிர்:

ஸ்பெயின் நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணம் செய்தவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆப்பிரிக்காவின் ஐவரிகோஸ்டில் இருந்து புறப்பட்ட கப்பல் ஸ்பெயின் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்தக் கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த மீட்புப் படையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர். விபத்துக்குள்ளான கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அக்கப்பலில் பயணம் செய்த 53 பேரில் ஒருவர் மட்டும் மீட்கப்பட்டார். எஞ்சிய 52 நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை. 

மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் கடலில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →