முகப்பு
உலகம்

ரஷிய எரிபொருள் கிடங்கின் மீது உக்ரைன் தாக்குதல்: போர் தீவிரமாகிறதா?

உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரோடில் எரிபொருள் சேமிப்பு நிலையத்தை உக்ரைன் ராணுவத்தினர் தாக்கியதாக நகரின் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
பகிர்:

உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரோடில் எரிபொருள் சேமிப்பு நிலையத்தை உக்ரைன் ராணுவத்தினர் தாக்கியதாக நகரின் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து வருகிறது. பல்வேறு நாடுகளின் ராணுவ  ஆயுதங்கள் உதவியுடன் உக்ரைனும் தொடர்ந்து போரிட்டு வருகிறது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷியா தாக்கி அழித்து வருகிறது. 

இந்நிலையில் ரஷிய எல்லையில் முதல்முறையாக உக்ரைன் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரோடில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கினை, உக்ரைன் படை ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியுள்ளதாக பெல்கோரோடு நகர ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும், இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயமடைந்ததாகவும் மேலும் நகரத்தின் மூன்று வீதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

முதல்முறையாக ரஷிய நகரில் அதிலும் எரிபொருள் சேமிப்புக் கிடங்கை உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது போர்ச்சூழலில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனால் போர் தீவிரமடையவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →