உலகம்

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,692 பேருக்கு தொற்று: 56 பேர் பலி 

DIN

கோலாலம்பூர்:  மலேசியாவில் சனிக்கிழமை நள்ளிரவு நிலவரப்படி, புதிதாக 14,692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று பாதிப்பு எண்ணிக்கையை 42,34,087 ஆக உயர்ந்துள்ளது.

மலேசியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சனிக்கிழமை நள்ளிரவு நிலவரப்படி, புதிதாக 14,692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை 42,34,087 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 56 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழன்ந்தோரின் எண்ணிக்கை 35,069 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 20,383 தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 39,97,786 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது 2,01,232 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர், அதில் 261 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 153 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. 

நாடு முழுவதும் சனிக்கிழமை மட்டும் மட்டும் 25,702 பேருக்கு கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்சம் 84.2 சதவிகிதம் பேருக்கு முதல் தவணை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும்,  79 சதவிகிதம் பேரு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 48.5 சதவிகிதம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT