பாக். நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்
பாகிஸ்தானில் நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கொசீருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கொசீருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
100-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுபற்றி ஜியோ செய்திகளுக்கு தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
"சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முன்வடிவு எதிர்க்கட்சிகளின் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முன்வடிவில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஒரு சார்புடையவர்களாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கட்சிப் பதவிகளிலிருந்து இருவரும் ராஜிநாமா செய்யாமல் விதிகளை மீறியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.