உலகம்

இலங்கையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

DIN

கொழும்பு: இலங்கையில் அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும் காபந்து அரசு அமைக்கப்பட்டுள்ளது. நான்கு அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கையின் பொருளாதார நெருக்கடி பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கும் நிலையில், முந்தைய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த தனது சகோதரர் பசில் ராஜபட்சவை பதவியிலிருந்து நீக்கியுள்ளார் கோத்தபய ராஜபட்ச

இலங்கை நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபட்சவுக்கு மாற்றாக அலி சாப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ஜி.எல். பெய்ரிஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், திணேஷ் குணவர்த்தனே கல்வித் துறை அமைச்சராகவும், ஜான்ஸ்டன் ஃபெர்னாண்டோ நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

நிரந்தர அரசு அமையும் வரை தற்காலிக அமைச்சரவை செயல்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமையை சமாளிக்க, பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவியைக் கோரும் வகையில் அமெரிக்கா செல்ல பசில் ராஜபட்ச திட்டமிட்டிருந்த நிலையில், இலங்கையின் புதிய அமைச்சரவையில் பசில் ராஜபட்ச இடம்பெறவில்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT