கோப்புப்படம் 
உலகம்

தேர்தல் அறிவித்த பிறகு உச்ச நீதிமன்றத்தை நாடுவது ஏன்? பாக். பிரதமர் கேள்வி

பாகிஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது ஏன் என அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN


பாகிஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது ஏன் என அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி திங்கள்கிழமை அவர் கூறியதாவது:

"தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் என்ன செய்கின்றன? நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திப்பவர்கள் நாடாளுமன்றத்தில் இல்லாவிட்டால் நாடு வளர்ச்சியை நோக்கி முன்னேறாது.

இந்த முறை கனவுகளுடன் இருப்பவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவோம். கடந்த முறை தேர்தலில் எப்படி போட்டியிட வேண்டும் என்பது தெரியாமல் இருந்தது. ஆனால், தற்போது எங்களுக்குத் தெரிந்துவிட்டது.

உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைப்பது ஜனநாயகத்துக்கு முரணானது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றே தேர்தலை அறிவித்திருக்கிறோம்" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT