உலகம்

கடைசியாக நாடாளுமன்றத்துக்கு வந்துவிட்டார் பசில் ராஜபட்ச

DIN


பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபட்ச வெகு நாள்களுக்குப் பிறகு இன்று நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தார்.

நாடாளுமன்றக் கூட்டத்தில் ஒரு இருக்கையில் மிகவும் அமைதியாக, இருக்கும் இடம் தெரியாமல் பசில் ராஜபட்ச உட்கார்ந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை நிதியமைச்சராக இருந்தபோது, பசில் ராஜபட்ச நாடாளுமன்றத்துக்கு வருகை தராமல் இருந்தபோது கடும் விமரிசனங்கள் எழுந்தன. மேலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இலங்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டபோதும், அவருக்கு எதிராக பல கேள்விக்கணைகள் எழுந்தன.

இவ்வளவு மோசமான நிலையில், நிதியமைச்சர் பதவியிலிருந்து பசில் ராஜபட்சவை அதிபர் கோத்தபய நீக்கினார். புதிய நிதியமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அலி சப்ரியும் 24 மணி நேரத்தில் நிதியமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இதற்கிடையே, பசில் ராஜபட்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டதாகவும் புரளிகளும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT