உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 49.36 கோடியாக அதிகரிப்பு

DIN

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49.36 கோடியாகவும், பலி எண்ணிக்கை 61.58 லட்சமாக அதிகரித்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்த வண்ணம் இருப்பது மக்களிடையே நிம்மதியை அளித்துள்ளது. 

தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 49,36,28,625  -ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 61,58,704 போ் உயிரிழந்துள்ளனர். 

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு மற்றும் இறப்புகள்  பதிவாகியுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்குப் பாதிப்பு 80,20,8,763 ஆகவும், பலி 9,82,576 ஆகப் பதிவாகியுள்ளது. 

கரோனா பாதிப்புகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு சுமார் 43,02,9,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT