உலகம்

புதன்கிழமைதோறும் சைக்கிள் நாள்: லட்சத்தீவுகள் அறிவிப்பு

DIN

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை சைக்கிள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என  அரசு ஊழியர்களுக்கு லட்சத்தீவுகள் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

லட்சத்தீவுகள் மாசு கட்டுப்பாட்டு கழகத்தின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் லட்சத்தீவுகளில் காற்று மாசைக் குறைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் ஒருபகுதியாக வாரந்தோறும் புதன்கிழமை நாளை அரசு ஊழியர்கள் சைக்கிள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

வாகனப் பயன்பாடுகளைக் குறைக்கவும், அதன்மூலம் காற்று மாசின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லட்சத்தீவுகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமைதோறும் அரசு ஊழியர்கள் சைக்கிள்களிலேயே அலுவலகம் வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள அரசு மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT