உலகம்

இலங்கையை விட்டு வெளியேறினார் கோத்தபயவின் உறவினர் நிரூபமா ராஜபட்ச

DIN


இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே,  அதிபர் கோத்தபயவின் உறவினரும், முன்னாள் துணை அமைச்சருமான நிரூபமா ராஜபட்ச நாட்டை விட்டு வெளியேறினார்.

செவ்வாய்க்கிழமை இரவு 10.25 மணிக்கு, காட்டுநாயகே பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபை செல்லும் எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் அவர் இலங்கையை விட்டு புறப்பட்டதாக அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளன.

இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபட்சவின் உறவினரும், 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கையின் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் துறையின் துணை அமைச்சராக நிரூபமா ராஜபட்ச பதவி வகித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT