உலகம்

தீர்ந்துபோகும் நிலையில் மருந்துகள்: இலங்கை மருத்துவர்கள் எச்சரிக்கை

DIN

இலங்கையில் உயிர்காக்கும் மருந்துகள் ஏறக்குறைய தீர்ந்துவிட்டதாகவும் இதனால் நாட்டில் கரோனாவைவிட உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இலங்கையில்  அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்துள்ளதால் அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை என மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக, இலங்கையில் உயிர்காக்கும் முக்கிய மருந்துகள் தீர்ந்துபோகும் நிலையில் இருப்பதாகவும் மருந்துகள் இல்லையெனில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

கரோனா உயிரிழப்புகளைவிட பொருளாதார நெருக்கடி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் இனி இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவக் கருவிகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைப் பெற முடியாது என்றும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT