முகப்பு
உலகம்

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணமான குவாசுலு-நடாலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகக் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Updated On : 12 ஏப்ரல், 2022 at 4:16 PM
பகிர்:

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணமான குவாசுலு-நடாலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகக் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

குவாசுலு-நடாலின் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் மெக்கென்சி கூறுகையில், 

மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி வரும் பணியைப் பேரிடர் மேலாண்மை செய்து வருகிறது. இப்பகுதியில் கட்டடங்கள், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

திங்கள்கிழமை இரவு முதல் குவாசுலு-நடாலில் பலத்த மழை பெய்து வருகிறது. இதெக்வினி நகராட்சி மற்றும் டர்பன் நகரம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகக் கருதப்படுகின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.