உலகம்

அமெரிக்காவில் 2 சீக்கியர்கள் மீது தாக்குதல்

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த 2 சீக்கியர்கள் தாக்கப்பட்டனர்.

DIN

அமெரிக்காவில் இந்திய வம்சாவளிகளான 2 சீக்கியர்கள் தாக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ரிச்மண்ட் ஹில்ஸ் பகுதியில் சென்றுகொண்டிருந்த இந்தியர்களான 2 சீக்கியர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பின் அவர்களிடம் கொள்ளை அடித்துச் சென்றதாகவும் அதில் ஒருவரைக் கைது செய்ததாகவும் ரிச்மண்ட் ஹில்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும்,  ‘கடந்த 10 நாள்களில் 2-வது முறையாக இதே இடத்தில் சீக்கியர்கள் தாக்கப்பட்டது அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது. இந்திய தூதரகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சீக்கியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துபையில் விழுந்து எரிந்த தேஜஸ் விமானம்! விசாரணைக்கு உத்தரவு

ஆஷஸ் டெஸ்ட் தொடரைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது: டெம்பா பவுமா

தவறான அணுகுமுறையால் கோவை மெட்ரோ பணியில் தாமதம்: இபிஎஸ்

சென்னையில் ரூ. 89.70 கோடி மதிப்பிலான 584 குடியிருப்புகள் திறப்பு!

ஜன நாயகன் இசை வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT