முகப்பு
உலகம்

சீனாஷாங்காயில் மீண்டும் கரோனா புதிய உச்சம்

சீனாவின் ஷாங்காய் நகரில் தினசரி கரோனா தொற்று வெள்ளிக்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 3,200 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

சீனாவின் ஷாங்காய் நகரில் தினசரி கரோனா தொற்று வெள்ளிக்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 3,200 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

சீனா முழுவதும் புதிதாக 3,472 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், 20,782 பேருக்கு அறிகுறிகளற்ற தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

2 வாரங்களுக்கும் மேல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள ஷாங்காய் நகரில் உணவுப் பற்றாக்குறை, நோயாளிகளை சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்வதில் தாதம் போன்ற பல்வேறு பிரச்னைகளால் அந்த நகர மக்கள் அவதியுற்று வருகின்றனா். இதன் காரணமாக சீன அரசின் கடுமையான கரோனா எதிா்ப்புக் கொள்கைக்கு மக்களிடையே எதிா்ப்பு அலை எழுந்துள்ளதாக அரசு ஊடகங்களே தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.