உலகம்

கொழும்பு பங்குச்சந்தை 5 நாள்களுக்கு மூடல்

DIN

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மூடப்படுகிறது. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயா்வு, எரிபொருள், உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல் குழப்பமும் நீடித்து வருகிறது. இலங்கை அரசைக் கண்டித்து மக்களின் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. 

பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியில் இருந்து வருகிறது. அவ்வப்போது தற்காலிகமாக சில மணி நேரங்கள் மூடப்பட்டும் வருகிறது. 

இந்நிலையில் கொழும்பு பங்குச்சந்தை முதல்முறையாக 5 நாள்களுக்கு மூடப்படுகிறது. 

இலங்கையின் பொருளாதார நிலைமைகளை சரிசெய்ய முதலீட்டாளர்களுக்கு கால அவகாசம் வழங்குவதற்காக கொழும்பு பங்குச் சந்தை அடுத்த வாரம் நிறுத்துமாறு இலங்கையின் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த வாரம் முழுவதும் அதாவது ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கொழும்பு பங்குச்சந்தை மூடப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT