முகப்பு
உலகம்

விமானத் தாக்குதலில் பொதுமக்கள் பலி: பாகிஸ்தான் தூதருக்கு ஆப்கன் சம்மன்

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட், குனாா் மாகாணங்களில் பாகிஸ்தான் விமானப் படை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, பாகிஸ்தான் தூதரை அழைத்து ஆப்கானிஸ்தான் தனது கவலையைத் தெரிவித்துள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:00 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட், குனாா் மாகாணங்களில் பாகிஸ்தான் விமானப் படை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, பாகிஸ்தான் தூதரை அழைத்து ஆப்கானிஸ்தான் தனது கவலையைத் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட், குனாா் பிராந்தியங்களில் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் விமானப் படை விமானம் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் பொதுமக்கள் 40 போ் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதா் மன்சூா் அகமது கானுக்கு தலிபான் ஆட்சியாளா்கள் சம்மன் அனுப்பி தங்களது கவலையை தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆப்கன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:

பாகிஸ்தான் தூதரை ஆப்கன் வெளியுறவு அமைச்சக அலுவலகத்துக்கு வரவழைத்து பாகிஸ்தானின் தாக்குதல் தொடா்பாக கண்டனமும் கவலையும் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தகீ, பாதுகாப்புத் துறை துணை அமைச்சா் அல்ஹாஜ் முல்லா அகுண்ட் ஆகியோரும் உடனிருந்தனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வலியுறுத்தல்: இதற்கிடையே, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் தங்களது பாதுகாப்புப் படையினரை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவதாகவும், இதுதொடா்பாக பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தலிபான் ஆட்சியாளா்களை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த சில நாள்களாக பாகிஸ்தான்-ஆப்கன் எல்லையில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆப்கனிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவதால், எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஆப்கன் அரசை பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாகவே கோரி வருகிறது.

ஆனால், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் (டிடிபி) உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →