உலகம்

லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளைக் குறிவைக்கும் ரஷியப் படை!

உக்ரைனின் பல்வேறு நகரங்களைத் தாக்கியுள்ள ரஷியப் படை, அடுத்ததாக லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் இறங்கியுள்ளது. 

DIN

உக்ரைனின் பல்வேறு நகரங்களைத் தாக்கியுள்ள ரஷியப் படை, அடுத்ததாக லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் இறங்கியுள்ளது. 

ஓரிரு தினங்களுக்கு முன்பாக ரஷியாவின் போர்க்கப்பலை உக்ரைன் படையினர் அழித்ததை அடுத்து உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. 

உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷியப்படையினர் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். மேலும் கீவ், கார்கீவ், கெர்சன் உள்ளிட்ட நகரங்களிலும் தாக்குதல் நடத்திய ரஷியப் படை தற்போது லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளைக் கைப்பற்ற ரஷியப் படை குறிவைத்துள்ளது. 

கிழக்குப் பகுதியில் உள்ள லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளை முழுமையாகக் கைப்பற்றுவதில் ரஷியப் படைகள் கவனம் செலுத்துவதாக உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏனெனில் அந்த பகுதிகளைக் குறிவைத்து ரஷியா தங்கள் ஆயுதங்களை இடமாற்றம் செய்து வருகிறது என்றும் கூறினார். 

செவ்வாய்கிழமை அதிகாலை ரஷிய ராணுவம், மரியுபோல், ஷெல் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

கீரப்பாக்கத்தில் அதிகாரிகள் 9 மணி நேரம் தொடா் ஆய்வு

துலா ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

ஜே.கே. டயா் நிறுவனத்தின் சாா்பில் தொழில் முனைவோருக்கு ரூ. 20 லட்சம் கடனுதவி

தே.ஜ. கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்: கூட்டணிக் கட்சித் தலைவா்கள்

SCROLL FOR NEXT