கோப்புப்படம் 
உலகம்

அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்படும்: இலங்கை பிரதமர்

அதிபருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் குறைக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபட்ச இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

DIN


அதிபருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் குறைக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபட்ச இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசிய அவர் கூறியதாவது:

"நாட்டை அரசியல் ரீதியாக நிலைப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளில் ஒன்றாக அதிகார இடமாற்றம் இருக்கும். பொருளாதாரத்தை மீட்பதற்காக சர்வதேச செலாவணி நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகார இடமாற்றம் உதவும்.

பொருளாதார பிரச்னைகளுக்குத் தீர்வு காண, நாட்டின் சமூக மற்றும் அரசியல் நிலைத்தன்மை முக்கியமானது. நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு நிலையே சீர்திருத்தத்தின் தொடக்கமாகும்" என்றார் அவர்.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அதிபர்தான் காரணம் என தொடர்ந்து 11-வது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) அதிபர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, திங்கள்கிழமை புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட 17 அமைச்சர்களிடம் பேசிய அதிபர் கோத்தபய ராஜபட்ச பொருளாதார நெருக்கடிக்கான தவறை ஒப்புக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT