உலகம்

பெய்ஜிங்: 2.1 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை

DIN

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கரோனா நோய்த்தொற்றின் சமூகப் பரவல் திடீரென அதிகரித்துள்ளதையடுத்து, அந்த நகரில் 2.1 கோடி பேருக்கு பிரம்மாண்ட கரோனா பரிசோதனை மேற்கொள்ள நகர நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அங்கு 22 பேருக்கு சமூக பரவல் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நகரம் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது.

திங்கள்கிழமை 35 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 32 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, இன்னும் விரிவாக 2.1 கோடி போருக்கு கரோனா பரிசோதனை செய்ய தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாட்டின் வா்த்தக தலைநகரான ஷாங்காயில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 52 போ் பலியாகினா். அந்த நகரில் இரு வாரங்களுக்கு மேல் கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தக் காரணமாக உள்ள புதிய அலையில், கரோனாவுக்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 190-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT