பிரிட்டன் நாடாளுமன்றம் 
உலகம்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஆபாச படத்தை பார்த்ததாக எம்பி மீது குற்றச்சாட்டு

பார்த்தவரின் பெயர் வெளியிடப்படாத நிலையில், குறிப்பிட்ட எம்பி ஆபாச படத்தை பார்த்து கொண்டிருப்பதை அவர் பின் அமர்ந்திருந்த தான் பார்த்ததாக பெண் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

DIN

பிரிட்டன் நாடாளுமன்ற கீழ் அவையில் எம்பி ஒருவர் ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்களுக்கு நேர்ந்த பாலின பாகுபாடு, பாலியல் சீண்டல்கள் குறித்து பெண் எம்பிக்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் அமைச்சர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். 

பார்த்தவரின் பெயர் வெளியிடப்படாத நிலையில், குறிப்பிட்ட எம்பி ஆபாச படத்தை பார்த்து கொண்டிருப்பதை அவர் பின் அமர்ந்திருந்த தான் பார்த்ததாக பெண் அமைச்சர் கூறியுள்ளார். இந்த சம்பவம் கடந்த வாரம் தேர்வு குழு கூட்டத்தில் நடைபெற்றதாக தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெண் எம்பிக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய மற்றொரு எம்பி, "ஒரு ஆண் எம்பி பல முறை ஆபாச படம் பார்த்ததை நானும் பார்த்திருக்கிறேன். அவர் பார்ப்பதை புகைப்படம் எடுக்கு முயற்சி செய்தேன். ஆனால், முடியவில்லை" என்றார்.

இதுகுறித்து கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி பாலின் லாதம் பிபிசியிடம் பேசுகையில், "கூட்டத்தில் இருந்த பல எம்பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொழில் முறை சார்ந்த இடத்தில் இப்படி நடக்கும் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. இந்த குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படும் பட்சத்தில் அவர் எம்பி பதவியிலிருந்து நீக்கப்படுவார். கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்தும் நீக்கப்படுவார்" என்றார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பாலின பாகுபாடு, பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. தொழிலாளர் கட்சியின் துணை தலைவர் ஏஞ்சலா ரெய்னர், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசும்போது தனது கால்கள் மூலம் அவரின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்த சம்பவம் பெரும் விமர்சனங்களை பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT