உலகம்

மியான்மர்: மேலும் 6 மாதத்திற்கு அவசர நிலை நீட்டிப்பு

DIN

மியான்மரில் தேசிய அவசர நிலையை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்கப் போவதாக மியான்மரின் ஜூண்டா ராணுவ ஆட்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அமோக வெற்றி பெற்று, தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகி அமைத்த ஆட்சியை  ஜூண்டா ராணுவம் அதிரடியாகக் கவிழ்த்தது. 

தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி ஆட்சியைக் கவிழ்த்த ராணுவம், ஆங் சான் சூகி உளளிட்ட அரசியல் தலைவா்களைக் கைது செய்ததுடன், அவா்கள் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்தது. 

மியானமரில் கடந்த ஆண்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்குப் பிறகு நடைபெற்ற போராட்டங்களில் மட்டும் பாதுகாப்புப் படையினா் சுமாா் 1,500 பேரை சுட்டுக் கொன்றனா்; சுமாா் 8,800 பேரைக் கைது செய்தனா். கணக்கில் வராத எண்ணிக்கையில் பலா் சித்திரவதைக்குள்ளாகினா்; பலா் மா்மமான முறையில் மாயமாகினா்.

2021 பிப்ரவரி 1 முதல் நாட்டிலுள்ள பல மில்லியன் கணக்கான் மக்கள் இதற்கு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

போராட்டக்காரர்கள் மீது சித்ரவதை, பத்திரிக்கையாளர்கள் மீதும் தடியடி, தன்னிச்சையான கைதுகள் என மனிதாபிமானத்திற்கு எதிராக செயல்படுவதாக மனித உரிமைகள் ஆதர்வாளர்கள் புகார்களை தெரிவிக்கின்றனர். 

இந்தாண்டு ஜனவரி முதல் தேசிய பாதுகாப்பு ஆணையம் முதல் 6 மாதத்திற்கு தேசிய அவசர நிலையை நீட்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் 6 மாதத்திற்கு அவசர நிலை தொடருமென சொல்லப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT