முகப்பு
உலகம்

சீன வங்கிகளுக்கு 300 மில்லியன் டாலர் இழப்பு?

சீனாவில் ஏற்பட்டுவரும் பொருளாதார மந்த நிலையினால் அந்நாட்டு வங்கிகளுக்கு 300 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுமென தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 2 ஆகஸ்ட், 2022 at 6:39 PM
கோப்புப் படம்
பகிர்:

சீனாவில் ஏற்பட்டுவரும் பொருளாதார மந்த நிலையினால் அந்நாட்டு வங்கிகளுக்கு 300 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுமென தகவல் வெளியாகியுள்ளது. 

சீன மக்கள் தங்கள் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கிகளில் பணத்தினை டெபாசிட் செய்யாமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சீன எவர்கிராண்ட் குரூப் எனும் நிறுவனம் அந்நாட்டின் மிகப்பெரிய வீட்டு வசதி மேம்பாடு நிறுவனம் ஆகும். இது ஜீலை மாதத்திற்குள் மறுகட்டடமைப்பு குறித்த திட்டத்தினை அறிவிப்பதாக கூறியிருந்தது. ஆனால் அதுக்குறிப்பிட்ட நேரத்தில் செய்யதவறியதால் மக்களுக்கு அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கை இழந்துள்ளது. 

Advertisement

எவர்கிராண்ட் நிறுவனத்திற்கு 300 மில்லியன் டாலர் கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வணிகத்தில் கொடுக்கல் வாங்கல் குறைந்ததனால் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனத் தகவல் சொல்லப்படுகிறது. 

குறித்த நேரத்தில் வீடு வராத்தால் பெரும்பாலான சீன மக்கள் வங்கிகளில் பணம் செலுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டு கட்டமைப்புகள் பணி மீண்டும் தொடராவிட்டால் வங்கிகளில் டெபாசிட் செய்யமாட்டோம் என 8 நகரங்களை சேர்ந்த 230 வீட்டு உரிமையாளர்கள் சொல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவின் 2 டிரில்லியன் யுவான் பணம் கட்டுமான தொடர்பான பணிகளில் தேங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. சீனாவின் வணிகத்தில் 80 சதவிதம் கட்டுமான தொழில்களில்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு இந்த தங்களது வீடு குறித்த நேரத்தில் வருமென்ற நம்பிக்கை இல்லாத காரணமே இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் முதன்மையான காரணமாக சொல்லப்படுகிறது. 

இந்த கட்டுமான உரிமையாளர்கள் சீனாவின் ஆட்சியாளர்களுடன் நெருங்கிய நண்பர்களாக இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.