முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து

பாகிஸ்தானில் மூத்த ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
பகிர்:

பாகிஸ்தானில் மூத்த ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் நேற்று இரவு அம்மாகாணத்தின் விந்தர் மற்றும் சசி புன்னு  இடையே விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத் தரப்பில், ’விபத்து நடந்த இடத்தை மீட்புப் படையினர் இன்னும் அடையவில்லை. காணாமல் போன ஹெலிகாப்டரில் 12 ராணுவப் படைகளின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சர்பராஸ் அலி உள்பட 6 மூத்த ராணுவ அதிகாரிகள் இருந்தனர்’ எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் தற்போதைய நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →