ரணில் விக்ரமசிங்க(கோப்புப்படம்) 
உலகம்

இலங்கையில் நாளை(ஆக.18) அவசரநிலை வாபஸ்

இலங்கையில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம் நாளை(ஆக.18) முடிவுக்கு வருகிறது.

DIN

இலங்கையில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம் நாளை(ஆக.18) முடிவுக்கு வருகிறது.

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டதும் அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுச் சொத்துகள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இலங்கையில் மீண்டும் அவசர நிலையை ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூலை 19 ஆம் தேதி அறிவித்தாா்.

அதன்பின், நடந்த முடிந்த அதிபர் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க முதல்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களைக் கண்டிக்கும் விதமாக, இலங்கை அதிபர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் உள்ள அனைத்து சட்டவிரோத கூடாரங்களையும் முகாம்களையும் அகற்றி அப்பகுதியை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் கலைந்து செல்லாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி போராட்டக்காரர்கள் காலி முகத்திடலை விட்டு வெளியேறுவதாகவும் போராட்டம் புதிய வடிவில் நடைபெறும் எனத் தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில்,  நேற்று இலங்கை அதிபர் அலுவலகம் ‘நாட்டின் நிலைமை சீராகியுள்ளது, இந்த வாரத்தில் அவசரகாலச் சட்டம் காலாவதியாகும்போது மீண்டும் அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை’ எனத் தெரிவித்துள்ளதால் அவசரநிலை பிரகடனம் நாளை(ஆக.18) முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT