உலகம்

'கடந்த 4 வாரங்களில் கரோனா இறப்பு 35% அதிகரிப்பு' - உலக சுகாதார அமைப்பு தகவல்

உலகத்தில் கடந்த 4 வாரங்களில் கரோனா இறப்பு 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

DIN

உலகத்தில் கடந்த 4 வாரங்களில் கரோனா இறப்பு 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு இன்னும் இருந்து வருகிறது. தொற்று பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், 'கரோனா தொற்றுடன் வாழக் கற்றுக்கொண்டதால் தொற்று பாதிப்பு இல்லை என்று எடுத்துக்கொள்ள முடியாது. தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், மற்றவர்களைப் பாதுகாக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். 

உலகம் முழுவதும் கடந்த நான்கு வாரங்களில் கரோனா, குரங்கு அம்மை உள்ளிட்ட உலகளாவிய நோய்களால் தொடர்பான இறப்புகளில் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் கரோனாவுக்கு 15,000 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கும்போது இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றைப் பின்பற்றுங்கள்' என்று கூறினார். 

மேலும், குரங்கு அம்மை குறித்து பேசிய அவர், 'கடந்த வாரம் 7,500 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய வாரத்தைவிட பாதிப்பு 20% அதிகமாகும். தற்போது வரை 92 நாடுகளில் 35,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்

தலைமை நீதிபதி மீது காலணி வீசியவருக்கு எதிராக வழக்கு இல்லை: உச்ச நீதிமன்றம்

ஷ்ரேயாஸ் ஐயருக்கு உள் ரத்த கசிவு! தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

புதுச்சேரியில் புதிதாக 38 பேட்டரி ஆட்டோக்கள், 2 செயலிகள் அறிமுகம்

சிறுபான்மையினரின் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தும் பாஜக: காங்கிரஸ்

SCROLL FOR NEXT