முகப்பு
உலகம்

60 கோடியைக் கடந்தது உலக கரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கரோனவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 60 கோடியைக் கடந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

உலகம் முழுவதும் கரோனவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 60 கோடியைக் கடந்தது.

இது குறித்து ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 5,46,098 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, உலகம் முழுவதும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 60,01,40,679-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பு பட்டியலில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 9,53,24,830 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 64,70,317 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →