சீனாவில் கடும் வெப்பம்: மீண்டும் சிவப்பு எச்சரிக்கை  
உலகம்

சீனாவில் கடும் வெப்பம்: மீண்டும் சிவப்பு எச்சரிக்கை 

சீனாவில் செவ்வாயன்று மீண்டும் கடுமையான வெப்பம் தகிக்கும் என்று கணித்துள்ள, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

ANI

சீனாவில் செவ்வாயன்று மீண்டும் கடுமையான வெப்பம் தகிக்கும் என்று கணித்துள்ள, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

சீனத்தில் கன்சு, ஷான்ஸி, அன்ஹு, ஜியான்சு, ஷாங்காய், ஹுபே உள்ளிட் பல பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலையானது 35 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும்என்று அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஹுனான், சிச்சுவான், ஷான்ஸி பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பம் பதிவாகக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகல் வேளையில் தொழிலாளர்களும் ஊழியர்களும் வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறும், வெளிப்புறங்களில் நடக்கும் பணிகளை தள்ளிவைக்குமாறு உள்ளூர் நிர்வாகங்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் தன்னார்வ மீட்புப் படையினரை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனத்தில் நான்கு நிறங்களில் எச்சரிக்கை  செய்தி விடுக்கப்படுவது வழக்கம். ஆரஞ்சு, மஞ்சள்,நீலம் மற்றும் சிவப்பு. இதில் உச்சபட்ட எச்சரிக்கையாக சிவப்பு எச்சரிக்கை பார்க்கப்படுகிறது.

கடும் வறட்சி...
சீனாவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த கோடையில் கடும் வறட்சி நிலவுகிறது. இனால், நீா் நிலைகள வடு காணப்படுகின்றன. நீா் மின்சாரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகளில் நீா்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, மின் உற்பத்தி குறைந்துள்ளது.

அதையடுத்து, மின்சாரத்தை சேமிக்கும் நடவடிக்கைகளில் சீன அரசு இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் மின்சாரத்தை ரேஷன் முறையில் பிரித்து வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, பயிா்களைப் பாதுகாக்க செயற்கை மழையை உருவாக்கவும் அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT