உலகம்

80 ஆண்டுகளில் 51 சதவிகிதம் காணாமல் போன ஆல்ப்ஸ் பனிப்பாறைகள் 

DIN

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பனிப்பாறைகள் கடந்த 80 ஆண்டுகளில் 51 சதவிகிதம் உருகி மறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

காலநிலை மாற்ற பாதிப்புகள் கடந்த சில தசாப்தங்களாக உலகம் முழுவதும் உணரப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களினால் சூழலியல் பேரிடர்கள் நிகழ்ந்துவருவது தொடர்கதையாகி வருகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக பனிப்பாறைகள் உருகி மறைந்து வருவது தற்போது தீவிரமடைந்துள்ளது. 

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனிமலைகள் காலநிலை மாற்றத்தின் காரணமாக வேகமாக மறைந்துவருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் சுவிட்சர்லாந்து கூட்டு வன நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் 1930ஆம் ஆண்டிலிருந்து ஆல்ப்ஸ் மலைத்தொடரின் 51.5 சதவிகித பனிமலைகள் உருகியுள்ளது தெரியவந்துள்ளது.

புவி வெப்பமயமாதலினால் ஒவ்வொரு ஆண்டும் 0.73 கனசதுர கிலோமீட்டர் பனிப்பாறைகள் உருகி வருவதாகத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 12 சதவிகித பனிப்பாறைகள் உருகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேசமயம் ஒட்டுமொத்தமாக ஆல்ப்ஸ் மலைகளில் பனிகள் உருகவில்லை எனக் குறிப்பிட்டுள்ளதுடன்  முந்தைய நிலைகளைக் காட்டிலும் பனி உருகுதல் விகிதம் தொடர்ந்து வேகமெடுத்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT