இந்தியர்களை வெறுப்பதாகக் கூறிய அமெரிக்கப் பெண் கைது
அமெரிக்காவில் இந்தியர்களைத் தரக்குறைவாகப் பேசியதற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் இந்தியர்களைத் தரக்குறைவாகப் பேசியதற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வாகனத்தை நிறுவத்துவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்மெரல்டா என்கிற பெண் ஒருவர் 4 அமெரிக்கா வாழ் இந்தியப் பெண்களிடம் மிகக் கடுமையாக நடந்துள்ளார்.
இதையும் படிக்க: இந்தியா தவிா்க்க இயலாத நட்புநாடு: அமெரிக்க அதிபா் மாளிகை
அவர்களைத் தாக்க முயற்சி செய்ததோடு இனவாதத்தைத் தூண்டு வகையில், ‘இந்தியாவில் வாழ்க்கை சரியில்லாததால்தானே நீங்கள் எல்லாரும் அமெரிக்காவிற்கு வருகிறீர்கள்? இங்கு வந்து எல்லாவற்றையும் இலவசமாகப் பெறவும் துடிக்கிறீர்கள். சுத்தமாக, நான் இந்தியர்களை வெறுக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.
மேலும், அவரிடம் துப்பாக்கி இருந்ததை கவனித்த இந்தியர்கள் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அனுப்பியதும் உடனடியாக விரைந்து வந்த காவலர்கள் தீவிரவாத அச்சுறுத்தல் பெயரில் அமெரிக்கப் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.