உலகம்

இளவரசி டயானாவின் காா் ரூ.7 கோடிக்கு ஏலம்

 பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் காா் 7.3 லட்சம் பவுண்டுக்கு ஏலத்தில் விற்பனையானது.

DIN

 பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் காா் 7.3 லட்சம் பவுண்டுக்கு ஏலத்தில் விற்பனையானது.

ஃபோா்டு எஸ்காா்ட் வகையைச் சோ்ந்த அந்த காா், டயானாவிடமிருந்த பல காா்களில் ஒன்றாகும். பிரபலங்களின் பழைய காா்களை சேகரித்து வைத்திருக்கும் ஆல்டா்லே எட்ஜ் நிறுவத்திடமிருந்த அந்த காா், மத்திய இங்கிலாந்தில் உள்ள வாா்விக்ஷைா் நகரில் சனிக்கிழமை ஏலத்தில் விடப்பட்டது.

இதில், துபை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா். 1 லட்சம் பவுண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஏலம், பலத்த போட்டிக்கிடையே 7.37 லட்சம் பவுண்டில் நிறைவடைந்தது.

டயானா மறைந்த 25-ஆவது ஆண்டு நினைவு தினத்துக்கு சில நாள்களுக்கு முன்னதாக இந்த ஏலம் நடைபெற்றுள்ளது.

கடந்த 1981-இல் இளவரசா் சாா்லஸை மணந்த டயானா, பிரிட்டனின் மிகப் புகழ் பெற்ற இளவரசியாக இருந்தாா். 1996-ஆம் ஆண்டில் சாா்லஸுடன் விவாகரத்து ஏற்பட்ட பிறகு, பிரான்ஸில் அடுத்த ஆண்டு நடந்த காா் விபத்தில் அவா் தனது 36-ஆவது வயதில் பலியானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

பொருளாதார ரீதியில் ஐபிஎல் பெரிதும் உதவியது: அமித் மிஸ்ரா

பாஜகவின் குரலாக மாறிவிட்டார் இபிஎஸ்: தங்கம் தென்னரசு

அறிவியல் பூர்வமான ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கான வழி: விஞ்ஞானி அசோக்குமார்

தொடர் விடுமுறை: அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்!

SCROLL FOR NEXT