உலகம்

ஆப்கானிஸ்தான்: ஓராண்டுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்குகள்

DIN

ஓராண்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பெண்கள் சினிமாவில் நடிக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவது பலருக்கும் மகிழ்ச்சியளித்திருக்கிறது. இருப்பினும், பெண்களுக்கான கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்வது அவர்களது உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

திரையரங்குகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து 37 திரைப்படங்கள் மற்றும் சில ஆவணப்படங்கள் வெளியாக உள்ளன. வெளியாக இருக்கும் இந்த திரைப்படங்களிலும் பெண்கள் அதிக அளவில் இடம் பெறவில்லை.

திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: “ ஓராண்டுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சினிமாவிற்கான கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்.” என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைவது எப்போது?

செவிலியா்களின் சேவைக்கு ஈடு இணை இல்லை

SCROLL FOR NEXT