என்னுள் ஒரு பகுதி இந்தியா: சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி 
உலகம்

என்னுள் ஒரு பகுதி இந்தியா: சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி

என்னுள் ஒரு பகுதி இந்தியா; நான் எங்கெல்லாம் செல்கிறேனோ என்னுடன் இந்தியாவையும் அழைத்துச் செல்கிறேன் என்று கூகுள் மற்றும் அல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

DIN


வாஷிங்டன்: என்னுள் ஒரு பகுதி இந்தியா; நான் எங்கெல்லாம் செல்கிறேனோ என்னுடன் இந்தியாவையும் அழைத்துச் செல்கிறேன் என்று கூகுள் மற்றும் அல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர அதிகாரிகள் மூலம், சுந்தர் பிச்சைக்கு, பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்திய - அமெரிக்கரான சுந்தர் பிச்சை, வணிகம் மற்றும் தொழில்துறை பிரிவின் கீழ் 2022ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை பத்ம பூஷண் விருதுக்கு தேர்வான 17 பேரில் ஒருவராக உள்ளார்.

இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் மூன்றாவது இடத்தில் இருப்பது பத்ம விருதுகள். இதனை வெள்ளிக்கிழமை சான் பிரான்சிஸ்கோவில் அவரது குடும்பத்தினர் பங்கேற்புடன் நடைபெற்ற எளிய விழாவில், சுந்தர் பிச்சை பெற்றுக் கொண்டார்.

இந்த மிகப்பெரிய கௌரவத்தை அளித்த இந்திய அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்னை வடிவமைத்த இந்திய நாட்டினால் இந்த வகையில் கௌரவிக்கப்படுவது விவரிக்க முடியாத அர்த்தங்களை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.

அமெரிக்காவில் இந்தியாவின் தூதர் தரன்ஜித் சிங் சந்துவிடமிருந்து 50 வயதாகும் சுந்தர் பிச்சை பத்ம பூஷண் விருதினைப் பெற்றுக் கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், என்னுள் ஒரு பகுதி இந்தியா. நான் எங்கெங்குச் சென்றாலும் அங்கு என்னுடன் வரும் என்றும் கூறினார் சுந்தர் பிச்சை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

SCROLL FOR NEXT