போப் பிரான்சிஸ் (கோப்புப்படம்) 
உலகம்

“உக்ரைனில் அமைதி நிலவட்டும்”: கண்ணீர் விட்ட போப் பிரான்சிஸ்

ரஷியா உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் பிரான்சிஸ் அழுத சம்பவத்தின் காணொலி வெளியாகியுள்ளது. 

DIN

ரஷியா உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் பிரான்சிஸ் அழுத சம்பவத்தின் காணொலி வெளியாகியுள்ளது. 

நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் அறிவிப்பு செய்தது. 200 தினங்களைக் கடந்து நடந்துவரும் இந்த போரில் இதுவரை இருதரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷியாவுடன் போரிட்டு இதுவரை 13 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் ரோமில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற போப் பிரான்சிஸ் இரு நாடுகளுக்குமிடையேயான போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி பேசினார். 

அப்போது உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என தெரிவித்த போப் பிரான்சிஸ் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அழுதார். இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்த போப் பிரான்சிஸ் உக்ரைன் மக்கள் அமைதியுடன் வாழ இறைவனிடம் வேண்டுவதாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

காந்தா டிரைலர் அறிவிப்பு விடியோ!

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

SCROLL FOR NEXT