உலகம்

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

DIN


மெக்சிகோ: மெக்சிகோ சிட்டியின் தென்மேற்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, சேதம் குறித்த உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மெக்சிகோவின் தென்மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவானது. 

இந்த நிலநடுக்கம் 3 கிலோமீட்டர் (1.9 மைல்) மேற்கு-வடமேற்கில் எல் டிகுய் மாகாணத்தில் 19.8 கிலோமீட்டர் (12.3 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தலைநகரின் சில பகுதிகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர், ஆனால் சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

மெக்ஸிகோ நகர மேயர் கிளாடியா ஷீன்பாம் ட்விட்டரில், நகரின் மேம்பாலம் சேதம் குறித்த எந்த அறிக்கைகளும் வரவில்லை என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT