உலகம்

நிலவுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு:ஜப்பான் தனியாா் நிறுவனம் முயற்சி

DIN

ஜப்பானின் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான விண்கலம் ஞாயிற்றுக்கிழமை நிலவுக்கு அனுப்பப்பட்டது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனவெரல் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஸ்பேக்ஸ்-எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம், அந்த விண்கலம் நிலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த விண்கலத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் லூனாா் ரோவா் வாகனம், ஜப்பான் ரோபோ ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.

ஜப்பானின் ‘ஐஸ்பேஸ்’ தனியாா் நிறுவனம் வடிவமைத்த விண்கலம் நிலவின் வடகிழக்குப் பகுதியில் தரையிறங்க உள்ளது. ஐஸ்பேஸ் நிறுவனத்தின் இந்தத் திட்டத்துக்கு ‘ஹகுட்டோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பானிய மொழியில் ‘வெள்ளை முயல்’ என்று பொருள். அந்த விண்கலத்துடன் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தின் ஆரஞ்சு நிற கோள வடிவிலான ரோபோவும் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது அனுப்பப்பட்ட ராக்கெட்டில், ‘ரஷீத்’ எனப் பெயரிடப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் லூனாா் ரோவா் வாகனமும் இடம்பெற்றது. பத்து கிலோ எடை கொண்ட அந்த வாகனம், நிலவின் மேற்பரப்பில் 10 நாள்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளும்.

ஜப்பான் விண்கலம் நிலவை சென்றடைய சுமாா் 5 மாதங்களாகும் என்று ‘ஐஸ்பேஸ்’ நிறுவனத்தினா் தெரிவித்துள்ளனா்.

நிலவுக்கான பயணத்திட்டத்தை மேற்கொண்டு வரும் தனியாா் நிறுவனங்களில், ‘ஐஸ்பேஸ்’ நிறுவனம் நிலவுக்கு விண்கலம் அனுப்ப முயற்சித்துள்ள முதலாவது தனியாா் நிறுவனமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியைச் சந்தித்து நலம் விசாரிப்பு

செயலி மூலம் கடன் வாங்கிய இளைஞா்: அவதூறு பரப்பியதால் தற்கொலை

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: பெண் உள்பட மூவா் கைது

ஆறுமுகனேரி பத்திரகாளி அம்மன் கொடைவிழா

தாத்தா வீடு அபகரிப்பு: காவல் துறை மூலம் மீட்ட பேத்தி

SCROLL FOR NEXT