ப்ளூ டிக் சேவை: தொலைபேசி வாயிலாக சரிபார்ப்பு முறை சேர்ப்பு 
உலகம்

ப்ளூ டிக் சேவை: தொலைபேசி வாயிலாக சரிபார்ப்பு முறை சேர்ப்பு

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டர், ப்ளூ டிக் சேவையில், தவறான நபர்களுக்கு ப்ளூ டிக் வழங்குவதைத் தடுக்கும் வகையில், தொலைபேசி வாயிலாக சரிபார்க்கும் முறையை சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

IANS

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டர், ப்ளூ டிக் சேவையில், தவறான நபர்களுக்கு ப்ளூ டிக் வழங்குவதைத் தடுக்கும் வகையில், தொலைபேசி வாயிலாக சரிபார்க்கும் முறையை சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ப்ளூ டிக் வழங்கப்பட்டிருப்பவர்களுக்கு, அவர்கள் இணைத்திருக்கும் செல்லிடப்பேசி எண் மூலம் அழைப்பு மேற்கொள்ளப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகு, ப்ளூ டிக் மீண்டும் உறுதி செய்யப்படும் என்று டிவிட்டர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, டிவிட்டர் நிறுவன மேலாளர் எஸ்தர் கிராஃபோர்டு, டிவிட்டர் வலைத்தளத்தில் ப்ளூ டிக் வழங்குவதற்கான நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, பல பயனாளர்கள் அது தொடர்பான சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். அதற்கு எஸ்தர் பதில்களை வெளியிட்டிருந்தார்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT