நாங்கள் வெல்வோம், இல்லையேல் உலகம் அழியும்: மக்களை கலக்கத்தில் ஆழ்த்தும் டுகின் பேச்சு
ஒன்று போரில் ரஷியா செல்லும், அல்லது உலகம் அழிந்துவிடும் என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதினின் மூளையாக செயல்படுபவர் என்று கூறப்படும் அலெக்சாண்டர் டுகின் கூறியுள்ளார்.
புது தில்லி: ஒன்று போரில் ரஷியா வெல்லும், அல்லது உலகம் அழிந்துவிடும் என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதினின் மூளையாக செயல்படுபவர் என்று கூறப்படும் அலெக்சாண்டர் டுகின் கூறியுள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அலெக்சாண்டர் டுகின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. 'நக்கலாக சிரித்த பயங்கரவாதி கசாப்': மும்பை தாக்குதலில் உயிர் தப்பியவரின் அனுபவம்
Advertisement
இரண்டு விஷயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. முதலில், நாங்கள் வெற்றி பெறும் தருணத்தில் இது முடிவுக்கு வரும். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. இரண்டாவது வாய்ப்பு, இந்த சண்டையானது, உலகம் அழியும் போது முடியும். ஒன்று நாங்கள் வெல்வோம் அல்லது உலகம் அழிந்துவிடும் என்று புதினின் குரு, புதினின் மூளை என்று பல்வேறு அடைமொழிகளுக்குச் சொந்தக்காரரும், அதிக அறிவாற்றல்மிக்கவர் என்று கருதப்படுபவருமான டுகின் குறிப்பிட்டிருப்பது உலக மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும் அவர் பேசுகையில், நான் ஒரு விஷயத்தை மட்டும் மிக உறுதியாகச் சொல்வேன், இந்த முறை எதிரியால் ரஷியாவை வெல்ல முடியாது. வெற்றியைத் தவிர, இந்த போரில் எந்த ஒரு தீர்வையும் நாங்கள் ஏற்கப்போவதில்லை. இதையே எங்கள் நாடும், எங்கள் மக்களும் எங்கள் அதிபரும் கருதுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் பயங்கரவாதிகள் எனக் கருதப்படுவோரால் டுகினின் மகள் மரணம் அடைந்ததன் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியின்போது இந்த நேர்காணலை அவர் அளித்துள்ளார்.
மரியா, எனது மகள், அவர் ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்படாவிட்டால், 30 வயதை எட்டியிருந்திருப்பார் என்று வருத்தத்தோடு கூறினார் டுகின்.