உலகம்

சிரிக்கக் கூடாது, அழவும் கூடாது.. மீறினால் மரண தண்டனை: வடகொரியா எச்சரிக்கை 

DIN


வடகொரிய நாட்டில் வசிக்கும் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தந்தை கிம் ஜாங்-இல்லின் பத்தாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, டிசம்பர் 17ஆம் தேதி முதல் 11 நாள்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, இந்த 11 நாள்களுக்கும் மக்கள் சிரிக்கக் கூடாது என்று மிகக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகாலமாக துக்க நாள்களில் இந்த தடை உத்தரவு அமலில் இருப்பது பலரும் அறிந்ததே.

அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, 11 நாள்களுக்குப் பிறகே அவரது இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்றும் மிகக் கொடுமையான தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன்; மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

SCROLL FOR NEXT